Tuesday, April 12, 2011
Muthal Pathivu
வெட்கமாய் இருக்கிறது காரணம் அறிவியல், கணிதம், கணினி ஆகிய துறைகளில் தமிழ் வழியில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கும் கூட தமிழ் எழுத்துக்களை மிகச்சரியாக வரிசைபடுதவும், வரிசையாக உச்சரிக்கவும் தெரியவில்லை என்பதுதான். உயிர் எழுத்து, மெய் எழுத்து வரிசையாக உச்சரி என்றால் விழி பிதுங்குகிறது. மெல்லினம், இடையினம், வல்லினம் என்றால் எண்ணம் வேறு எங்கோ செல்லுகிறது. வார்த்தையாக இருக்கும்போது உச்சரிக்க முடிகிறது, தனியாக எழுத்தை முன்னிறுத்தி உச்சரிக்க சொன்னால் வெட்கப்படுவதை விடுத்து உதடு சிரிக்கிறது தெரியவில்லை என்று. இந்நிலைக்கு காரணமே நமது கல்வி நிலைதான். ஆம் நாம் யார் என்று நமக்கு தெரிவதற்கு முன்னர் தமிழமுது ஊட்டப்படுகிறது, தெரியும்போது (பன்னிரண்டாம் வகுப்பு கடந்ததும்) அனைத்தும் ஆங்கிலமாக அலட்டுகிறது. நாங்கள் யார் என்று தெரிய ஆரம்பம் ஆகும் போது அரசு வழியிலோ அல்லது பிற வழியிலோ இளைஞர்களுக்கான கட்டாய கடமையாக தினசரியோ அல்லது தொடர் நடைமுறையிலோ, தமிழை வாசிக்கும் முறையிலும், எழுத்து முறையிலும் உபயோகபடுத்தும் வண்ணமாக ஒரு புதிய வழிமுறையை அரசு கையாள வேண்டும்.
0 Comments
Subscribe to:
Post Comments (Atom)